Saturday, November 12, 2016

Kollywood wallpaper collections latest November 2016

Kollywood wallpaper collections

http://wallpapers.filmibeat.com/specials/kollywood-beauties/wallpapers-c19-e42265-p35192.html

நிர்வாணமாக ஓடுவேன் என ஏன் அறிவித்தேன் தெரியுமா?: பூனம் பாண்டே

மும்பை: 2011ம் ஆண்டு உலகக் கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி வென்றால் நிர்வாணமாக மைதானத்தில் ஓடுவேன் என அறிவித்தது பப்ளிசிட்டிக்காக என நடிகை பூனம் பாண்டே தெரிவித்துள்ளார். நானும் மாடல் அழகியாக்கும், நானும் பாலிவுட் நடிகையாக்கும் என்று பூனம் பாண்டே வாய் வலிக்க கூறியும் அவரை யாருமே கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் தான் 2011ம் ஆண்டு அதுவும் ஒரே நாளில் மிகவும் பிரபலமானார். யாருடா இந்த பூனம் பாண்டே என்று ஆளாளுக்கு கூகுள் செய்தனர்.





சர்ச்சை கான்கள், கபூர்கள் இருக்கும் இடத்தில் நமக்கு அடையாளம் கிடைப்பது மிகவும் கஷ்டம் என்பதை உணர்ந்தேன். அந்த அடையாளத்தை பெற மற்றும் கவனத்தை ஈர்க்க சர்ச்சையை கிளப்ப முடிவு செய்தேன். அதனால் நிர்வாணமாக மைதானத்தில் ஓடுவதாக அறிவித்தேன் என பூனம் கூறியுள்ளார்.


Source: http://tamil.filmibeat.com/

மோடிக்கும் முன்னாடி ஒருத்தார் இந்த வேலையைச் செய்துள்ளார்

மோடிக்கும் முன்னாடி ஒருத்தார் இந்த வேலையைச் செய்துள்ளார்!

பிரதமர் மோடிக்கு முன்பு 1978ம் ஆண்டு அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாய் ரூ. 100க்கு மேல் இருந்த ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்த சம்பவத்தை நாடு பார்த்தது.

டெல்லி: பெரிய ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்த 2வது பிரதமர் நரேந்திர மோடி. அவருக்கு முன்பு இதேபோன்ற அதிரடியைச் செய்த பிரதமர் மொரார்ஜி தேசாய்.
இருவருமே காங்கிரஸ் சம்பந்தப்படாத பிரதமர்கள் என்பது இதில் வித்தியாசமான ஒற்றுமையாகும். இந்திய வரலாற்றில் இதுவரை 2 முறை மட்டுமே பெரிய ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில் இன்னொரு விசேஷம் என்னவென்றால் இந்த முடிவுகளை அறிவித்த இரு பிரதமர்களுமே குஜராத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுதான்.

1978ல்

1978ம் ஆண்டு பிரதமராக இருந்த ஜனதாக் கட்சியின் மொரார்ஜி தேசாய் ரூ. 100க்கு மேல் இருந்த ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அதிரடியாக அறிவித்தார்

Source: http://tamil.oneindia.com/


சொந்த பந்தம் சீரியல் வில்லி நடிகை சபர்னா தற்கொலை


சென்னை: சொந்த பந்தம் டிவி சீரியல் நடிகை சபர்ணா மதுராவயலில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி, சன்டிவியில் சீரியல்களில் நடித்தவர் சபர்ணா. சொந்த பந்தம் தொடரில் வில்லியாக நடித்து பிரபலமடைந்த சபர்ணாவிற்கு சினிமா வாய்ப்புகள் வரவே சீரியலில் நடிப்பதில் இருந்து விலகினார்.
கோவையைச் சேர்ந்தவர் சபர்ணா, இவர் படிக்காதவன், பிரிவோம் சந்திப்போம், காளை, பூஜை உள்பட பல திரைப்படங்களில் ஹீரோயின் தோழியாக நடித்துள்ளார்.
காதலில் விழுந்த அவருக்கு காதல் தோல்வி ஏற்பட்டதாக அவரே ஒருமுறை பேட்டியில் கூறியுள்ளார்.
பெற்றோர் மாப்பிள்ளை பார்ப்பதாகவும், அவரையே திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் சில ஆண்டுகளுக்கு முன்பு கூறியிருந்தார் சபர்ணா. மதுராவயலில் வசித்து வந்த சபர்ணா இன்று சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவரது தற்கொலைக்காண காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Source: tamil.oneindia.com

ரூ.2000 நோட்டில் எழுத்துப் பிழை: சிரிப்பாய் சிரிக்கும் ட்விட்டர்



சென்னை: புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 2000 ரூபாய் நோட்டில் எழுத்துப் பிழை இருப்பதை கண்டுபிடித்து மக்கள் அதை ட்விட்டரில் கிண்டல் செய்து வருகிறார்கள்.
கறுப்பு பணத்தை ஒழிக்க 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதையடுத்து 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் 2000 ஆயிரம் ரூபாய் நோட்டில் எழுத்துப்பிழை உள்ளதை மக்கள் கண்டுபிடித்துள்ளனர்.
Source: tamil.oneindia.com

Thursday, November 10, 2016

மோடியின் அடுத்த 'சர்ஜிக்கல் அட்டாக்' வங்கி லாக்கர்கள்?



மோடி அதிரடி 
ஒரே இரவில் அதிரடியாக 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் மோடி அதிரடியாக வெளியிட்ட அறிவிப்பு நாடு முழுவதும் பெரும் பீதியை கிளப்பியுள்ளது. இது முதல் கட்டம் என்றும் கருப்புப் பணம் ஒழிப்புதொடர்பாக மோடி மேலும் பல திட்டங்களை வைத்துள்ளதாகவும் பேச்சு அடிபடுகிறது. அந்த வகையில் கருப்புப் பண ஒழிப்பில் அடுத்த கட்டமாக பேங்க் லாக்கரில் பாதுகாப்பாக வைக்கப்படும் நகைகள் 600 கிராமுக்கு மேல் இருந்தால், அதற்கு முறையான ஆவணங்கள் காண்பிக்கப்பட வேண்டும். இல்லையெனில் வரி விதிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.